அமானி மல்லாபுரத்தில் பாமக மேற்கு மற்றும் வடமேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

அமானி மல்லாபுரத்தில் பாமக மேற்கு மற்றும் வடமேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம்.

பாலக்கோடு, ஏப்ரல் 6:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அமைந்துள்ள அமானி மல்லாபுரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மற்றும் வடமேற்கு ஒன்றியங்களுக்கான பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் துரை வரவேற்புரை வழங்கினார். மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேச்வரன் எம்.எல்.ஏ, தொகுதி பொறுப்பாளர்கள் செல்வகுமார் மற்றும் செந்தில் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.


மாநில அளவில் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள வன்னியர் இளைஞர் பெருவிழாவிற்கு, ஒவ்வொருவரும் திரளாக பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் அருண்குமார், சின்னசாமி, சாமிக்கண்னு, ஒன்றிய தலைவர் ஏழுகுண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில், முன்னாள் ஒன்றிய தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad