பென்னாகரம், ஏப்ரல் 19:-
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, குளோபல் தீவிர சிகிச்சை மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பென்னாகரம் பேரூராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் இன்று (19.04.2025) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இம்முகாம் பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முகாமின் துவக்க நிகழ்ச்சியில் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் திரு. கி. வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் திரு. த. செந்தில்குமார், ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் ந. தேவகி ஆகியோர் தலைமையிலான சிறப்புரையுடன் முகாம் துவங்கியது. மேலும், குளோபல் தீவிர சிகிச்சை மருத்துவமனை தலைவர் திரு. குணா, பேரூராட்சி துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். முகாமின் தொடக்கத்தில் கண் பாதுகாப்பு மற்றும் விசப்பூச்சிகள் கடித்தால் எடுக்க வேண்டிய அவசர மருத்துவ நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு உரையை பேரூராட்சி தலைவர் வழங்கினார்.
பென்னாகரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது உடல்நலத்தையும் கண் பார்வையையும் பரிசோதித்துக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக