பாலக்கோடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புலிக்கரை பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஏப்ரல், 2025

பாலக்கோடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புலிக்கரை பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு.

பாலக்கோடு, ஏப்ரல் 19:-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிழக்கு ஒன்றியம், புலிக்கரை பேருந்து நிறுத்தத்தில் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் வெயில்கால பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா கடந்த காலை சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழா ஒன்றிய செயலாளர் கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி அமைப்பாளர்களான திலீப் குமார் மற்றும் திருமலை ஆகியோர் விழாவை அழகாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் பூமணி, ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான திரு. இன்ப சேகரன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள் உள்ளிட்ட இனிப்பு மற்றும் குளிர்பானங்களை வழங்கி விழாவை சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் கந்தையன், முத்தையன், சண்முகம், சங்கர், கவிதா, அர்ஜுன், மாது, அர்ஜுனன், மாதையன், வெங்கடேசன், ஹரிதரன் உள்ளிட்ட திமுக கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad