தருமபுரி, ஏப்ரல் 9 –
2024-2025ஆம் ஆண்டிற்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் சமுதாய அமைப்புகளிடமிருந்து வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊரக மற்றும் நகர்புறங்களில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் (ஊரகம் / நகர்புரம்), கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான, பகுதி அளவிலான மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவை ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் சிறப்பான சேவைகளுக்காக மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ச்சியாக, இவ்வாண்டிற்கான விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களை, உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தேவையான ஆவணங்களுடன், கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் சமர்ப்பிக்கலாம்:
அனைத்து தகுதியான அமைப்புகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விருதுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக