பாலக்கோடு, ஏப்.-9
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது.42) குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்த நிலையைில் 2வதாக கோவிந்தம்மாள் (வயது. 40) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 15 வயதில் பவித்ரா என்ற பெண் பிள்ளையும், 8 வயதில் கிருத்திகா என்ற பெண் பிள்ளையும் உள்ளனர். குமார் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே கோழி கறிகடை வைத்து நடத்தி வருகிறார். கோவிந்தம்மாளுக்கும் கடைக்கும் வரும் வாடிக்கையாளர் சிலருடன் தகாத தொடர்பு இருப்பதாக கூறி கனவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு குமார் கோழி கடையில் தூங்க சென்றார்.
இந்நிலையில் விடியற்காலை கை கால்கள் கட்டப்பட்டு கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி மற்றும் உறவினரிடம் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக