தருமபுரியில் மேதினத்தில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தருமபுரியில் மேதினத்தில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, 29 ஏப்ரல் 2025

தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் மே 1ஆம் தேதி நடைபெறும் மேதின விழாவையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், மற்றும் FL-3, FL-3A, FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக் கூடங்கள் ஆகிய அனைத்தும், 30.04.2025 இரவு 10.00 மணி முதல் 02.05.2025 காலை 12.00 மணி வரை மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.


அந்தக் காலப்பகுதியில் எந்தவொரு வகையிலும் மதுபான விற்பனையோ, விநியோகமோ மேற்கொள்ளக் கூடாது. இந்த உத்தரவை மீறி செயற்படுவோர் அல்லது மறைமுகமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad