தருமபுரி, 29 ஏப்ரல் 2025
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 30.04.2025 அன்று தொடங்குகிறது.
பயிற்சி வகுப்பில் எழுதுத் தேர்வுக்கான பாடங்கள், சிறுதேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகள் நடைபெறும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு 3000க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட இலவச நூலகம், பயிலகம், இலவச Wi-Fi மற்றும் கணினி வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வழங்கப்படுகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள் https://shorturl.at/5YNcY என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு நேரில் மையத்தை அணுகவோ அல்லது 04342–288890 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்வதன் மூலமும் தகவல்கள் பெறலாம்.
தகுதியுள்ள தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயிற்சி பெற்று, பணியில் சேரும் வாய்ப்பை பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக