தர்மபுரி, ஏப்ரல் 19:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்துடன் கூடிய கடும் வெயில் நிலவிக்கொண்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தர்மபுரி நான்கு ரோடு சிக்னல் பகுதிகளில் சிக்னலுக்காக நீண்ட நேரம் வாகனங்களில் நிற்கும் ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலையை கவனித்த JCI தர்மபுரி அமைப்பினர், வாகன ஓட்டிகளுக்கு வெயிலில் இருந்து தற்காலிக நிழல் அமைக்க புதிய முயற்சியாக பச்சை நிறம் கொண்ட தார்ப்பாய்களை சிக்னல் பகுதியில் நிறுவினர். இதன் மூலம் சிக்னலுக்கு நின்றபோதும் நேரடி வெயில் தாக்கத்தை வாகன ஓட்டிகள் தவிர்க்க முடிகிறது.
இந்த நிழலடி திட்டம் JCI தர்மபுரி தலைவர்கள் திரு. ரவிகுமார், விஜயகுமார், பாபு ஆகியோர் தலைமையில் செயல்படுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சமூக விழிப்புணர்வாளர் மற்றும் வழக்கறிஞர் சுபாஷ் அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கினார். தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன், JCI தர்மபுரி இந்த திட்டத்தை மக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெயில் காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சிறு முயற்சியும் சமூகத்தில் வலுவான விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் JCI தர்மபுரி அமைப்பினருக்கு நன்றியை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக