நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுதி அளித்து ஆட்சி அமைத்த திமுக அரசைக் கண்டித்து, தர்மபுரி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணையின்படி, முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய MLA கே.பி. அன்பழகன் தலைமையில், தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து அரசு மருத்துவமனை வரை அணிவகுப்பு நடைபெற்றது.
மாணவர்கள் உயிரிழப்புக்கு திமுக அரசின் பொறுப்பின்மை காரணம் எனக் குற்றச்சாட்டு எழுப்பிய அப்போது, மாணவ மாணவிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாணவரணி அமைப்புச் செயலாளர் முல்லைவந்தன், மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர். அன்பழகன், அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக