தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு இலவச கைப்பந்து பயிற்சியை பாலக்கோடு நண்பர்கள் கைப்பந்து குழுவினர் தொடர்ந்து மூன்றும் ஆண்டுகளாக இலவச கைப்பந்து பயிற்சி அளித்து வருகின்றனர் இந்த ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி முதல் மே 20 தேதி வரை 20 நாட்கள் காலை மாலை என பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் நடைபெறும் இப்பயிற்சியை பாலக்கோடு வட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறது மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பால் முட்டை மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியினை பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் பயிற்சியினை துவக்கி வைக்கிறார். இப்பயிற்சி மற்றும் ஏற்பாடுகளை பாலக்கோடு நண்பர்கள் கைப்பந்து குழுவின் தலைவர் மகேந்திரன் செயலாளர் சரவணன் மற்றும் குழுவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இப்பயிற்சி கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள். 9865811367, 9789244481.

