கரகதஅள்ளி கடைமடை ஏரியில் தன்னார்வ அமைப்புகளால் சீரமைப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

கரகதஅள்ளி கடைமடை ஏரியில் தன்னார்வ அமைப்புகளால் சீரமைப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.


தருமபுரி, ஏப்ரல் 30:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கரகதஅள்ளி ஊராட்சி, கடைமடை ஏரியில் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமை கருவேல மர அகற்றம் மற்றும் ஏரி கரை பலப்படுத்தும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த பணி, பாலக்கோடு டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, தருமபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, பென்னாகரம் ஜெயம் சமுதாய வள மையம், தருமபுரி ஆதி பவுண்டேஷன், தருமம் அறக்கட்டளை ஆகிய ஐந்து அமைப்புகளால் 25 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


பின்னர், பாலக்கோடு தொழில்நுட்ப சேவை மையம் மற்றும் பட்டு வளர்ச்சி துறை சார்பில், புலிக்கரையில் ஒருவரது சொந்த நிலத்தில் அமைக்கப்பட்ட புழு வளர்ப்பு மனை மற்றும் மல்பெரி தோட்டத்தையும், மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். பட்டு வளர்ச்சித் துறை வழங்கும் மானியங்கள் மற்றும் நிகர லாபம் தொடர்பான விவரங்களை விவசாயியிடம் கேட்டறிந்தார்.


மேலும், மாரண்டஅள்ளி பேரூராட்சியில், ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலக கட்டிடமும், ரூ.2.45 லட்சத்தில் கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடமும் நேரில் பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.


இதையடுத்து, பஞ்சப்பள்ளி அரசு குழந்தைகள் இல்லத்திலும், மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக அலுவலர்களிடம் தகவல்களை பெற்றுக் கொண்டார்.


இந்த ஆய்வுகளின்போது, உதவி இயக்குநர்கள் திரு. கணேசன் மற்றும் திரு. நிர்மல் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ரேணுகா, பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் திரு. ஜம்பு, மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad