தருமபுரி, ஏப்ரல் 30:
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலம், நீர்வளம், பயிர் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் புகார்களை நேரில் கேட்டறிந்து தீர்வுகள் வழங்கும் வகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே மாதத்திற்கு எதிர்வரும் 02.05.2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கூட்டம், மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் நோக்கில், இந்த கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. ரா. காயத்ரி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக