தருமபுரி, ஏப்ரல் 29:
தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலனை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக்குழு (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) மற்றும் மாவட்ட விழிக்கண்குழு (துப்புரவு பணியாளர் நலன்) ஆகிய இரண்டு குழுக்களும் இயங்கிவருகின்றன. தற்போது, இக்குழுக்களின் தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், அவை புதுப்பிக்கப்பட உள்ளன.
இதற்காக, சமூக சேவைகளில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான மாவட்ட குழுவில்:
-
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 3 அரசுத் தர அலுவலர்கள் (Group A)
-
அரசு ஊழியர்கள் அல்லாத ஆதிதிராவிடர்/பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள்
-
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் அல்லாத 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
துப்புரவு பணியாளர் நலக்குழுவில்:
-
ஒரு இரயில்வே பிரதிநிதி
-
துப்புரவு பணியாளர்களில் இருந்து 4 சமூக சேவகர்கள்
இந்த உறுப்பினர்களுக்கான அலுவல்சாரா இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு நேரில் அல்லது தபால் மூலமாக 15.05.2025க்குள் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் திரு ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக