பாலக்கோடு அருகே நடுசாலையில் கட்டிலில் படுத்தப்பட்ட 90 வயது மூதாட்டி தர்ணா! – போலீசார் விளக்கம்.! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

பாலக்கோடு அருகே நடுசாலையில் கட்டிலில் படுத்தப்பட்ட 90 வயது மூதாட்டி தர்ணா! – போலீசார் விளக்கம்.!


பாலக்கோடு, ஏப் 29.

தருமபுரி மாவட்டம்‌ , பாலக்கோடு காவல்‌ உட்கோட்டம்‌ , மகேந்திரமங்கலம்‌ காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட பூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள்‌ 90), க/பெ வேங்கடசாமி என்பவரை அவரது மகன்கள்‌ சரியாக பராமரித்துக்கொள்ளாததை கண்டித்து பூத்துப்பட்டியை சேர்ந்த திம்மராஜ்‌, வெள்ளிச்சந்தையை சேர்ந்த மோசஸ்‌ முருகன்‌ மற்றும்‌ சிலர்‌ போக்குவரத்துக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இடையூறு ஏற்படுத்தும்‌ விதமாக வெள்ளிச்சந்தை நான்கு ரோடு அருகில்‌ மேற்படி மூதாட்டியை கட்டிலில்‌ வைத்துக்கொண்டு சாலை மறியலில்‌ ஈடுபட்டனர்.


மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்‌ கலைந்து போக சொல்லியும்‌ கேட்காமல்‌ சத்தம்‌ போட்டுகொண்டு இருந்தவர்கள்‌ மீதும்‌ மூதாட்டியை பராமரிக்க தவறிய மகன்கள்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்க கோரி கருக்கனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர்‌ அவர்கள்‌ மகேந்திரமங்கலம்‌ காவல்‌ நிலையத்தில்‌ கொடுத்த புகாரின்‌ பேரில்‌ 27.04.2025 அன்று காவல்‌ நிலைய குற்ற எண்‌ : 39/2025 -ன்‌ U/S Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 r/w 189(2), 223 BNS கீழ்பராமரிக்க தவறிய மகன்கள்‌ மீதும்‌ போக்குவரத்துக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இடையூறு ஏற்படுத்தியவர்கள்‌ மீதும்‌ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


தற்போது மேற்கண்ட மூதாட்டி 108 ஆம்புலன்ஸ்‌ மூலம்‌ தருமபுரி அரசு மருத்துவமனையில்‌ சேர்க்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில்‌ இருந்து வருகிறார்‌. மேலும்‌ மூதாட்டியை முதியோர்‌ இல்லத்தில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad