ஓகேனக்கல் குடிநீர் திட்டம் – பராமரிப்பு பணிகள் காரணமாக மே 7, 8 ஆகிய இருநாட்களில் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஓகேனக்கல் குடிநீர் திட்டம் – பராமரிப்பு பணிகள் காரணமாக மே 7, 8 ஆகிய இருநாட்களில் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.


தருமபுரி, ஏப்ரல் 29:

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் ஓகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃபுளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 600 மில்லி மீட்டர் விட்டத்துடைய வார்ப்பிரும்பு (DI) பிரதான குடிநீர் குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இந்த பராமரிப்பு பணிகள் வரும் மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதால், குறித்த இருநாட்களில் தருமபுரி நகராட்சி, பென்னாகரம், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், பி.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஏரியூர், பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, கடத்தூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஓகேனக்கல் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படும்.


இதையடுத்து, மேலுள்ள பகுதிகளில் குடிநீர் சிக்கலுக்கு ஏற்ப முந்தைய நாட்களில் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு, மேலும் உள்ளூர் நீராதாரங்களிலிருந்து பெறப்படும் நீரை மற்ற தேவைகளுக்காக பயன்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad