தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் தேமுதிக பொதுசெயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறியது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில், தேமுதிக மாநில மாநாடு வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கட்சி திட்டமிட்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி முன்னேறுகின்றது.
மேலும், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியின் இளைஞரணிக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. திரு. விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளராக, திரு. சுதிஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
தமிழகம் முழுவதிலிருந்தும் கலந்து கொண்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என கூட்டம் பேரதிர்வுடன் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக