ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்ட தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்ட தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.


பாலக்கோடு, மே 1, 2025

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளி சந்தையில் நேற்று தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறப்பட்டது. இதில், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.


கூட்டத்தையடுத்து தேமுதிக பொதுசெயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், பாலக்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயிலுக்கு நேரில் சென்று அம்மனை வழிபட்டார். அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொண்டர்களுடன் இணைந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் அர்ச்சனை செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.


இவளுடன் இளைஞரணி செயலாளர் திரு. விஜய் பிரபாகரன், பொருளாளர் திரு. சுதிஷ், மாவட்ட செயலாளர் திரு. விஜய் சங்கர் மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர் திரு. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அம்மனை ஆராதனை செய்தனர். இந்த வழிபாடு நிகழ்வு, கட்சியினரிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad