பாலக்கோடு கோழி இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கில் உள்ளிட்ட 4 பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

பாலக்கோடு கோழி இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கில் உள்ளிட்ட 4 பேர் கைது.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா கொரவன் திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் குமார், (வயது.41), பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்தார்.

இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே கோழிஇறைச்சி கடை மற்றும் பழைய இரும்பு கடை வைத்து  நடத்தி வந்தார். திருமணமான  இவர் முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.


இந்த நிலையில் பாலக்கோடு எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (36) என்பவரை குமார் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். கோவிந்தம்மாள், கணவருக்கு உதவியாக கோழிக்கடைக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார்.


கடந்த சில வருடங்களாக கோவிந்தம்மாளுக்கும் புது பட்டாணியர் தெருவை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நாகராஜ் (வயது.27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரத்தில் கோவிந்தம்மாள் நாகராஜ் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த குமார் கள்ள காதலை கைவிட கூறியுள்ளார்.


ஆனால் கள்ள காதலை கைவிட மறுத்து இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கனவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தம்மாளை  வீட்டை விட்டு துரத்தியதால், பாலக்கோடு அண்ணாநகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தஞ்சமடைந்தார்.


இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலை  கோழிக்கடை வழியாக சென்றவர்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் இறந்து கிடப்பதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், டி .எஸ்.பி மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.


இந்நிலையில் குமாரின் மனைவி கோவிந்தம்மாளை பிடித்து விசாரித்ததில் கள்ள காதலுக்கு குமார் இடையூறாக இருந்ததால்  கனவரை கொன்று விட்டு கோழிக்கடை, இரும்பு கடையை அபகரித்து கொண்டு உல்லாசமாக வாழலாம் என கள்ளக் காதலன் நாகராஜ் உடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகவும், அதன் படி  கடந்த 8ம் தேதி இரவு சுமார்  11 மணி  கள்ள காதலன் நாகராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகளான  சொன்னம்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (27) சாமியார் கொட்டாயை சேர்ந்த தமிழரசன் (25) ஆகியோர், கடையில் தனியாக தூங்கி கொண்டிருந்த குமாரை கை, கால்களை கயிற்றால் கட்டி விட்டு தலையணை முகத்தில் வைத்து அமுக்கியதாகவும், அப்போதும் உயிர் போகாததால் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக விசாரனையில்  தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து, நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில்  குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதனை தொடர்ந்து கோவிந்தம்மாள், நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் உள்ளிட்ட  4 பேரையும் கைது செய்து சேலம் மத்திய  சிறையில் அடைத்தனர்.


கள்ள காதலனுக்காக  கனவனை  கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad