கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் அறங்காவலர் காயத்ரி கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் தமிழரசு வாழ்த்துரை வழங்கியதுடன், இயந்திரவியல் துறைத் தலைவர் மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். யுனைடெட் சாப்ட் டெக் நிறுவனர் மாதேஸ்வரன் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றினார். அவர் தாள் உலோகத் தயாரிப்புத் துறையில் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்கள், நவீன தீர்வுகள் மற்றும் தொழில்துறை-கல்வி கூட்டுழைப்பின் தேவை குறித்து விளக்கமாக விரிவுபடுத்தினார்.
நிகழ்வின் முடிவில், உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் நன்றியுரை நிகழ்த்தினார். கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்துறை விருந்தினர்கள் இணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கினர். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கான இத்தகைய முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக