பாலக்கோடு, மார்ச் 26 – தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் இன்று காலை உணவு பாதுகாப்பு துறையும் மீன்வளத் துறையும் இணைந்து திடீர் ஆய்வு நடத்தினர். சமீபத்தில் ஒகேனக்கல் பகுதியில் 50 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அனைத்து மீன் மார்க்கெட்டுகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுஜாதாவின் வழிகாட்டுதலின் கீழ், காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. நந்தகோபால் மற்றும் மீன்வளத் துறை உதவி இயக்குநர் திரு. கோகுலரமணன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்தது.
ஆய்வில், ஆந்திராவிலிருந்து வந்த ரூட்சந்த் (பாறை மீன்), மீர்கால், ரோகு மீன்களும், உள்ளூர் ஜிலேபியா மீன்களும் விற்பனைக்கு இருந்தன. பரிசோதனையில், பழைய அல்லது கெட்டுப்போன மீன்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள், மீன் விற்பனை இடங்களில் கழிவுகளை உடனடியாக அகற்றவும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் மீன்வளத் துறை ஆய்வாளர் திரு. சந்தோஷ், உதவி ஆய்வாளர் திரு. திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு, மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான மீன்கள் கிடைப்பதை உறுதி செய்யும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியை பிரதிபலிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக