ஆதிதிராவிடர் மற்றும் பிற இன மாணவர்களுக்கு JEE Mains பயிற்சி – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

ஆதிதிராவிடர் மற்றும் பிற இன மாணவர்களுக்கு JEE Mains பயிற்சி – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

An_educational_training_session_for_students_prepa

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்க உள்ளன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஆதரிக்கவும், உயர்கல்வியில் முன்னேற தகுதிபெறவும் இந்த பயிற்சி ஏதுவாக இருக்கும்.


இந்த பயிற்சியில் சேருவதற்கான தகுதி அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.


சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவுடன் உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான கட்டணத் தொகையும் CPCL நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் பயிற்சி பெற்றதில் 26 மாணவர்கள் IIT, NIT போன்ற உயர்நிலை கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர்.


இந்த பயிற்சிக்கு தகுதியான மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad