தருமபுரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காணும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.03.2025 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறும்.
தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக