மல்லுபட்டியில் 11ம் வகுப்பு மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் - போலீசார் விசாரணை - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

மல்லுபட்டியில் 11ம் வகுப்பு மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் - போலீசார் விசாரணை


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது 49) மற்றும் அவரது மனைவி சூர்யகலா தம்பதிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகள் இளமதி (வயது 16) மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.


கடந்த இரண்டு மாதங்களாக அவர் மனமுடைந்த நிலையிலும் தனிமையில் இருப்பதுபோன்ற தன்னம்பிக்கையற்ற மனோபாவத்திலும் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் இதுகுறித்து விசாரித்தபோதும், எந்தவொரு பிரச்சினையும் இல்லை என கூறி வந்துள்ளார்.


இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வெளியே செல்லுவதாக கூறிய அவர், அருகில் உள்ள மாந்தோப்பிற்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊரினர் அவரை தேடினர்.


அப்போது, அந்த பகுதியில் உள்ள முனுசாமி என்பவரது மாந்தோப்பில் உள்ள மாமரத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இளமதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து, மாணவியின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறியும் வகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad