தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேசமயம், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய முன்னோடித் திட்டங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திமுகவின் கிளை செயலாளர் சங்கர், ஊர் கவுண்டர் ராஜேந்திரன், அவைத்தலைவர் ராஜாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக