தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ARDS தொண்டு நிறுவன அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழா விழிப்புணர்வுடன் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நீர் மேலாண்மை, நீர்ப்பாசனம், குடிநீர் பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் காக்கும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன இயக்குநர் ஆனந்தன் தலைமை வகித்தார். பாலக்கோடு இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுப்பரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், நீர் மாசுபாட்டைத் தவிர்ப்பது, மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்து விரிவாக விளக்கினார். பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் நீர் பற்றாக்குறை உருவாகி வரும் சூழ்நிலையில், நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நீரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விழாவில், நீர் மேலாண்மையில் மகளிர் பங்கேற்பு என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது, இதில் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, தங்கள் கேள்விகளுக்கு விளக்கங்கள் பெற்றனர். மேலும், பொதுமக்கள் நீரை மதிக்க வேண்டும், வீணாக கசியும் நீரை தடுப்பது, மழைநீர் சேகரிப்பின் அவசியம், மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது போன்ற முக்கிய கருத்துக்கள் விழாவில் வலியுறுத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில், வனிதா நன்றியுரை வழங்கி, விழாவின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக