மொரப்பூரில் ஆதரவற்ற குழந்தையின் நல்லடக்கம் – மனிதநேய சேவையில் மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

மொரப்பூரில் ஆதரவற்ற குழந்தையின் நல்லடக்கம் – மனிதநேய சேவையில் மை தருமபுரி அமைப்பினர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் ஒருவயது குழந்தை இருதய நோயால் உயிரிழந்த நிலையில், மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் அதன் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டு மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.


மேற்கு வங்க மாநிலம் புர்துவான் பகுதியைச் சேர்ந்த பூவத் தாஸ் என்பவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கேரளாவின் தலச்சேரி பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன், அவரது குழந்தைக்கு இருதய நோய் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சொந்த ஊருக்குத் திரும்பிய போது, மொரப்பூர் ரயில்நிலையத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்தது.


சடங்குகளை நடத்த ஏதுவாகக் குடும்பத்தினர் ஒருவரும் அருகில் இல்லை. இந்த தகவல் அறிந்த மொரப்பூர் ரயில் நிலைய காவலர் தேவராஜ், வாகன ஓட்டுநர் அருள் பிரகாஷ் மற்றும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் செந்தில், சையத் ஜாபர், கணேஷ் ஆகியோர் இணைந்து இறுதிச் சடங்குகளை நடத்தினர்.


மை தருமபுரி அமைப்பு இதுவரை 138 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது, இதில் நான்கு பச்சிளங்குழந்தைகளும் அடங்கும். "நாங்கள் இருக்கும் வரை யாரும் ஆதரவற்றோராக இருக்கமாட்டார்கள்" என அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad