தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய ஜிட்டாண்டஅள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கில் எம்.வீ.டி. கோபால் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பொருளாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் குட்டி (எ) மோகன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 ஏழைகளுக்கு வேட்டி, சேலை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய பழனியப்பன், திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் முக்கிய திட்டங்களை மக்களுக்கு விளக்கினார். கலைஞர் மகளிர் உதவித் தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை எடுத்துரைத்தார்.
விழாவில் திமுக அணிகளின் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக