Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்.


தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், அரூர் மற்றும் காரிமங்கலம் வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடக்க நிகழ்வு பெரியாம்பட்டி சமுதாய கூடத்தில் நடைப்பெற்றது. 


பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கீழ் மூன்று நாட்கள் தொழில் முனைவர் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிக் கடன் பெறுவது எப்படி?, தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்ற முக்கிய தலைப்புகளில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வை மாவட்ட திட்டக்குழுவின் மாவட்ட திட்ட அலுவலர் திரு வ. கருணாநிதி அவர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அ .லலிதா திட்ட இயக்குனர் மகளிர் திட்டம். கா முருகேசன் உதவி திட்ட அலுவலர்.ஆகியோர்கள் இணைந்து பயிற்சியினை ஆய்வுசெய்தனர். திருமதி காயத்ரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூன்றாம் நாள்  நிகழ்வில் பயிற்சி முடித்த மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் .


மேலும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தருமபுரி மாவட்ட திட்ட மேலாளர் இன்ஜினியர் கௌதம் சண்முகம் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் பயிற்சியாளர் திரு. அரிஹரசுதன் Hifi11 Technologies நிறுவனர் மற்றும் கௌதம் சண்முகம் மற்றும் அப்துல் காதர் சேலம் மாவட்ட திட்டம் மேலாளர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


இந்த பயிற்சி மூலம் பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்ந்து சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் பயனடைவது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies