தருமபுரி மாவட்ட பலமுனை பட்டுநூற்பாளர்கள் மாநில அளவில் சிறந்த சாதனை - மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

தருமபுரி மாவட்ட பலமுனை பட்டுநூற்பாளர்கள் மாநில அளவில் சிறந்த சாதனை - மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.

02%20copy%20%5Bphotoutils.com%5D

தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த தருமபுரி மாவட்ட பலமுனை பட்டுநூற்பாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குதல் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டு நூற்பாளர் திரு. க. பிரகாஷ் (த/பெ கமலேசன்) அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/- வழங்கப்பட்டது. அதேபோல், தருமபுரி மாவட்டம் ராஜகோபால்கவுண்டர் தெருவைச் சேர்ந்த பட்டு நூற்பாளர் திருமதி. வேதவள்ளி (க/பெ ஜெயன்) அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.75,000/- வழங்கப்பட்டது.

01%20copy%20(2)%20%5Bphotoutils.com%5D

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கடந்த 25.03.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.


மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களாக தேர்வாகி, முதன்மை மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்ற தருமபுரி மாவட்டத்தின் இரு பட்டுநூற்பாளர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து, பெற்ற சான்றிதழ்களை காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.


இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி. கே.எஸ். செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர், பட்டுவளர்ச்சி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், பலமுனை பட்டுநூற்பாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி, இனியும் நல்ல சாதனைகள் அடைய மாவட்ட நிர்வாகம் ஆதரவாக இருக்கும் என உறுதியளித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad