தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு (25.03.2025 வரை) 15.52 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2024-2025ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1,68,770 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது.
2024-2025ஆம் ஆண்டிற்கு நெல், சிறுதானியங்கள், பயற்கள், எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 922 மெட்ரிக் டன் விதைகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மார்ச் 2025 வரை 544.50 மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட்டுள்ளது. உயிர் உரங்களாக அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா உள்ளிட்டவை 50,410 எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 50,860 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) குணசேகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைத்து விவசாய திட்டங்களும் சரிவர செயல்பட, விவசாயிகளின் குறைகள் உடனடியாக தீர்க்க, அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தினார்.

.jpg)