தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்புக் கல்வியாண்டில் (2024-25) இடைநிலை பத்தாம் வகுப்பு (10-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வுகள் இன்று (28.03.2025) தொடங்கி, வருகின்ற 15.04.2025 வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 318 பள்ளிகளைச் சேர்ந்த 23,788 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வில் 1965 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 102 முதன்மை கண்காணிப்பாளர்கள், 102 துறை அலுவலர்கள், 102 பறக்கும் படைகள் உள்ளிட்ட மொத்தம் 2476 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக