கொரோனா ஊரடங்கின்போது, தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, கடத்திகுட்டை, அரகாசனஅள்ளி வழியாக சின்னம்பள்ளிக்கு 5C அரசு டவுன் பஸ் தினமும் நான்கு முறை இயக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு தருமபுரியில் இருந்து புறப்பட்டு, 11.20 மணிக்கு சின்னம்பள்ளியில் முடிவடைந்தது.
ஆனால், ஊரடங்குக்கு பிறகு இந்த பஸ் சேவை மாற்றமடைந்து, தற்போது இரவு 7 மணிக்கு மட்டுமே புறப்படுகின்றது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், மருத்துவ சேவையை பயன்படுத்துவோர், கர்ப்பிணி பெண்கள், வியாபாரிகள் ஆகியோர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதனால், ஐந்து பஞ்சாயத்து கிராம மக்கள் இணைந்து, இன்று தருமபுரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து, கொரோனா முன்புபோல் பஸ் சேவையை மீண்டும் இயங்க செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக