தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி மற்றும் தருமபுரி ரோட்டரி கிளப் இணைந்து மூன்று நாள் ஆங்கில பேச்சுப் பயிற்சி பட்டறையை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி, தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமை வகித்தனர். கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் தமிழரசு வாழ்த்துரை வழங்க, நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் வரவேற்று பேசினார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஆங்கிலம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியை வழங்கினர். இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் மொழித்திறனை மேம்படுத்தினர். நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக