தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இஸ்லாமிய குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மானுல்லா, மாலிக், யூனிஸ்கான், ஹாபூப் ஜான், சலீமா, சாதத், அப்சல், கமால், சுமேயில், நஜ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சி, 4வது வார்டு ஜான்கான் தெருவில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும், 26 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முத்து, நாகராசன், கலாவதி, ஜெயராமன், சேகர், பாண்டியம்மாள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக