வெள்ளிசந்தை 4 ரோடு ரவுண்டானா பகுதியில் அகற்றப்பட்ட உயர் மின் கோபுரம் மீண்டும் அமைக்க கோரிக்கை - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

வெள்ளிசந்தை 4 ரோடு ரவுண்டானா பகுதியில் அகற்றப்பட்ட உயர் மின் கோபுரம் மீண்டும் அமைக்க கோரிக்கை

தர்மபுரி, மார்ச் 26 – தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பிக்கனஅள்ளி ஊராட்சியின் வெள்ளிசந்தை 4 ரோடு ரவுண்டானா பகுதியில், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயன்பெறுவதற்காக உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணி நடந்தபோது அதிகாரிகள் இந்த மின்கோபுரத்தை அகற்றினர். அதன்பிறகு மீண்டும் அமைக்கப்படவில்லை.


இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, பஞ்சாயத்து நிர்வாகமே இதை சரிசெய்ய வேண்டும் என்று பதில் அளித்தனர். ஆனால், பிக்கனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வைத்திருப்பதால், இரவு நேரங்களில் இருட்டு சூழ்ந்து வாகன விபத்துகளும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.


அதுமட்டுமல்லாமல், வெள்ளிசந்தை பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மினி தண்ணீர் டேங்குகளை, சில தனி நபர்களின் தூண்டுதலால் பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றியதாக பொதுமக்கள் குற்றம் சொல்கின்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீருக்காக பெண்கள் குடங்களுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக உயர் மின்கோபுரம் மற்றும் மினி தண்ணீர் டேங்குகளை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad