தர்மபுரி, மார்ச் 26 – தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திமுக மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாஸ்திரமுட்லு கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் குமரன் மற்றும் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தருமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், அரசு வழக்கறிஞர் முருகன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
சிறப்பு விருந்தினராக தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் போன்ற நல உதவிகளையும் அசைவ உணவுகளையும் வழங்கினார். மேலும், தமிழக அரசின் சாதனைகளான மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ஆகியவற்றை விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கிளை கழக நிர்வாகிகள் மணி, மாதேஷ், வெங்கடேசன், பன்னியப்பன் உள்ளிட்ட கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக