பாலக்கோடு வட்டத்தில் இரண்டு நாள் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

பாலக்கோடு வட்டத்தில் இரண்டு நாள் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி, மார்ச் 26 – தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ் நேரடியாக ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, பாலக்கோடு திருமலைவாசன் திருமண மண்டபத்தில் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.


இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சதீஷ், விவசாயிகள் தங்கள் நில உரிமைகளை சரிபார்க்க அக்ரிஜிஸ்டர் ஆப் மூலம் பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பெல்ரம்பட்டி நெடுஞ்சாலை மேல் தெரு பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மேலும், 5-வது மைல்கல் கிராமத்தில் திருநங்கைகளுக்கான புதிய வீடு கட்டும் பணியில் தவறான பயனாளிகள் சேர்க்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்யவும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு விதிகளை மீறி 700 சதுர அடியில் இருந்து 1000 சதுர அடி வரை வீடு கட்டுவதை சுட்டிக்காட்டி அதிகாரிகளை எச்சரித்தார்.


அதேபோல், சுகாதார இணை இயக்குநர் சாந்தி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட அலுவலர் லலிதா, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராஜாங்கம், காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் பிற அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad