இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 96 மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. மேலும், 33 புதிய மனுக்கள் பதிவுசெய்யப்பட்டன. காவல்துறையின் செயல்திறனையும், மக்களின் புகார்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமையையும் இதனால் வெளிப்படுத்துகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன், முகாமின் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு, மனுக்களுக்கு விரைவாக தீர்வு வழங்க அதிகாரிகளை உத்தரவிட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K. ஸ்ரீதரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பெட்டிஷன் மேளாக்கள் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கிடையேயான நேரடி தொடர்பை மேம்படுத்துவதுடன், புகார்களை நேரடியாக ஆராய்ந்து தீர்வு வழங்கும் பங்களிப்பை மேற்கொள்கின்றன. தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இம்முகாம், பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குவதில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக