தருமபுரியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

தருமபுரியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை.

Courtroom_Scene_Tamil_Nadu
AI Generated Image.

தருமபுரி, மார்ச் 26 – தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவில் உள்ள பெருசாகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (29), கோவிந்தசாமியின் மகன், லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 09.01.2023 அன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.


இதை அறிந்த மாணவியின் பெற்றோர், 1098 குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர், 06.04.2023 அன்று மாணவியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், இன்று (26.03.2025) தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றவாளி சுரேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி திரு. பி. சிவஞானம், எம்.ஏ., எம்.எல்., தீர்ப்பு வழங்கினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad