தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே அமைந்துள்ள ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒருநாள் தொழில்நுட்பம் குறித்த தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.


கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி, தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமையேற்று, கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த், மற்றும் முதல்வர் தமிழரசு முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் ஹெக்சஷாவேர் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மாணவர்கள் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படிப்பதை பெருமையாக நினைத்து, தங்கள் துறை சார்ந்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், சிறந்த தொழில் முனைவோராக உருவாக அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


கருத்தரங்கின் நிறைவாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad