தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி 8வது வார்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவீரன் பகத்சிங் நினைவு தினம் பாரதிதாசன் தெருவில் கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பகத்சிங் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, பேரூராட்சி கவுன்சிலர் விசுவநாதன், சி.பி.எம் பகுதி குழு செயலாளர் சக்திவேல், வாலிபர் சங்க பகுதி குழு உறுப்பினர் ராஜசேகர், முன்னாள் தலைவர் லோகநாதன், தன்னார்வலர் மகேந்திரன் ஆகியோர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது தியாகங்கள் குறித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் கமலக்கண்ணன், அலாவுதீன், திராவிடர் கழக நிர்வாகி சின்னராஜி, அருள்மணி, பூங்காவனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பகத்சிங்கின் வீரத்தினை நினைவுகூர்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக