பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு சி ஐ.டி.யு.சார்பில் மின்சார வாரியம் தனியார் மயமாக்கலை கண்டித்து பிரச்சாரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு சி ஐ.டி.யு.சார்பில் மின்சார வாரியம் தனியார் மயமாக்கலை கண்டித்து பிரச்சாரம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யு சார்பில்  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறும் தனியார்  மயத்தை கண்டித்து பிரச்சாரம் இயக்கம் பாலக்கோடு கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில்  நடைபெற்றது. மாநில துணை தலைவர் ஜீவா, பாலக்கோடு கோட்ட செயலாளர் கோவிந்தன், திட்ட செயலாளர்கள் லெனின், மகேந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.


இதில் தனியார் நிறுவனம் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், இதனால் ஒவ்வொரு மாதமும் 80 முதல் 150 ரூபாய் வரை மீட்டர் வாடகை கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.


மின் கணக்கீட்டு பணி, மின் இணைப்புகளை துண்டிப் செய்வது, மறு இணைப்பு செய்யும் பணி, மின் கணக்கீடு போன்ற பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால்  இலவச மின்சாரம் என்பது இல்லாமல் போகும் ஆபத்து உள்ளது.


மின்சார வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலி பணி இடங்களை உடனே நிரப்பிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad