முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.4 கோடி வரை கடன் உதவி - தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.4 கோடி வரை கடன் உதவி - தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

Note: Its an AI Generated Image.

தருமபுரி, மார்ச் 25, 2025 – மாண்புமிகு முதல்வரின் "காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்குவதற்காக அதிகபட்சம் ரூ.4 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட "காக்கும் கரங்கள்" திட்டம், முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், ரூ.4 கோடி வரையிலான கடன் உதவியை வழங்குகிறது. இதில் 30 சதவீதம் முதலீட்டு மானியமாகவும், மீதமுள்ள தொகைக்கு 3 சதவீத வட்டி மானியமாகவும் அளிக்கப்படும்.


முன்னதாக இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு 55 வயது என விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு தளர்த்தப்பட்டு, தற்போது உச்சபட்ச வயது வரம்பு இல்லை என அரசாணை திருத்தப்பட்டுள்ளது. இதனால், தொழில் தொடங்க ஆர்வமும் விருப்பமும் கொண்ட முன்னாள் படைவீரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய, தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (தொலைபேசி எண்: 04342-297844) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் முன்னாள் படைவீரர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad