தருமபுரி, மார்ச் 26, – தருமபுரி மாவட்டத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கும் எண்ணத்துடன் 20 தொண்டு அமைப்புகள் சேர்ந்து தருமபுரி உணவு வங்கி என்ற அமைப்பை உருவாக்கின. தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களுக்கு உணவு கொடுப்பதற்காக இந்த அமைப்பு 2023 பிப்ரவரி 16 அன்று தொடங்கப்பட்டது. முதல் நாள் உணவை கடத்தூரைச் சேர்ந்த "Travel Flow" நிறுவனத்தின் தலைவர் திரு. இல. அருண் கொடுத்தார். அதன் பிறகு, 2023 மார்ச் 8 மகளிர் தினத்தன்று மீண்டும் தொடங்கப்பட்டு, இப்போது வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இன்று 750-வது நாளை வெற்றியுடன் எட்டியதால், சீட்ஸ் தொண்டு அமைப்பு 50 பேருக்கு உணவு, PPDC தொண்டு அமைப்பு 50 பேருக்கு உணவு, No Food Waste அமைப்பு 50 பேருக்கு உணவு மற்றும் PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 150 பேருக்கு முட்டைகள் கொடுத்தன. மொத்தம் 150 பேருக்கு முட்டைகளுடன் உணவு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரு. அ. சரவணன் (சீட்ஸ் தொண்டு அமைப்பு), திரு. இல. அருண் (Travel Flow), திரு. வ. வினோத்குமார் (பசியில்லா தருமபுரி), திரு. கோகுல் (No Food Waste), திரு. ஓகே கிருஷ்ணமூர்த்தி (தகடூர் தூண்கள்), திருமதி. கலைவாணி (WCWR உலக மகளிர் அமைப்பு) மற்றும் திரு. D. வேல் முருகன் (PPDC தொண்டு அமைப்பு உதவியாளர்) ஆகியோர் வந்து சிறப்பு சேர்த்தனர்.
கடந்த 750 நாட்களாக உணவு கொடுக்க உதவிய 20 தொண்டு அமைப்புகளுக்கும், மக்களுக்கும் தருமபுரி உணவு வங்கி மனம்கனிந்த நன்றி சொன்னது. இந்த நிகழ்ச்சியை திரு. இல. அருண் (Travel Flow), இம்மாத ஒருங்கிணைப்பாளர், ஏற்பாடு செய்து நடத்தினார். தருமபுரி உணவு வங்கி, இனி வரும் நாட்களிலும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுத்து, பசியை போக்கும் வேலையை தொடர்ந்து செய்ய உறுதியாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக