இந்தப் பயிற்சி கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மின்னணு வடிவமைப்பு, உற்பத்தி துறை, தானியங்கி தொழில்துறை, இயந்திரவியல் மற்றும் சேர்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத்திறன்களை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் நோக்கம் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான வழிவகுப்பை வழங்குவதாகும்.
தாட்கோ கடந்த ஆண்டு இப்பயிற்சியின் மூலம் 28 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது. Thermofisher Scientific, Ashok Leyland, G Care India, TCS போன்ற தனியார் முன்னணி நிறுவனங்களில் பயிற்சி முடித்தவர்கள் Mechanical R&D Graduate Engineer Trainee மற்றும் R&D Business Development போன்ற பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பயிற்சியானது மொத்தம் 18 வாரங்கள் நீடிக்கும். கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் நடைபெறும். பயிற்சி முடித்தவர்கள் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப், மின்னணு உற்பத்தி நிறுவனம், மோபிலிட்டி மற்றும் ஆட்டோமோட்டிவ் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,000 ஊதியமாக பெறலாம்.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் 2022, 2023 மற்றும் 2024 கல்வியாண்டுகளில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 21 முதல் 25 வயது வரையுள்ளவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் முழுமையாக தாட்கோ ஏற்கும். மேலும் விவரங்களுக்கு தருமபுரி தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சென்று தகவல் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக