இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 24.03.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால், துறை அலுவலர்களிடம் மனுக்கள் அனுப்பி உடனடி தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 7,500 மதிப்பில் கால் தாங்கி வழங்கப்பட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் 2 பயனாளிகளுக்கு Standby Signal Device வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.பாலசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தனி வட்டாட்சியர் (கேபிள் டிவி) திரு.ராஜராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக