தருமபுரியில் ₹87 லட்சம் சீட்டு மோசடி – ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் குடும்பம் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

தருமபுரியில் ₹87 லட்சம் சீட்டு மோசடி – ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் குடும்பம் புகார்.


தர்மபுரி, மார்ச் 25 – தர்மபுரியில் சீட்டு மூலம் ரூ.87 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மனைவி மற்றும் மாமியார் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பிடமனேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பர்கத் அலியின் மனைவி முபாரக் ஜான் மற்றும் அவரது மாமியார் மக்புல் புகார் மனு வழங்கினர்.


அவர்களின் மனுவில், “2018 முதல் 2024 வரை தர்மபுரியில் செயல்படும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என பல்வேறு சீட்டு குரூப்புகளில் சேர்ந்து பணம் செலுத்தினோம். ஆனால், சீட்டு தவணை முடிந்த பிறகு, எங்களுக்குத் தேவையான ரூ.81 லட்சம் தொகையை வழங்காமல் ஏமாற்றி வந்தனர். தொடர்ந்து பதில் கூறி வந்த அந்த நிறுவனர், ‘வெளிநாட்டில் உள்ள மகள் மற்றும் மருமகன் பணம் அனுப்பியுள்ளனர், ஆனால் எடுக்க முடியாத நிலை’ என கூறி காலம் தாழ்த்தி வந்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.


மேலும், “தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது, பைனான்ஸ் நிறுவனத்தினர் வக்கீல் மற்றும் அடியாட்களை அனுப்பி மிரட்டலை தொடங்கினர். ‘நீங்கள் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?’ என கேட்டு மனஅழுத்தம் கொடுத்து வருகின்றனர்” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புகாரின் அடிப்படையில் கலெக்டர் சதீஷ், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad