பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அக்கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தினார் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் வழிகாட்டுதலின்படி பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமைந்துள்ள அஷ்ரபியா ஜாமியா மசூதியில், நகர செயலாளர் விக்னேஷ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.


சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி மாவட்ட செயலாளர்கள் தாபா சிவா மற்றும் விஜயகாந்த் கலந்து கொண்டு, நோன்பு கஞ்சி அருந்தி இப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட பொருளாளர் கோபிகிருஷ்ணன், நகர செயலாளர் சிட்டி சுரேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய இணை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad