பென்னாகரம் வட்டம் ஏரியூர் சிடுமனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பொறுப்பு ஞானசேகரன் பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக வைகை தொண்டு நிறுவனர் குமரேசன் கிருஷ்ணன் கலந்து கொண்டு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் பேசினார். "கல்வி ஒரு நல்ல மனிதராக வளர வழிகாட்டும். ஆசிரியர்கள் வழங்கும் அறிவைப் பயனுள்ளதாகக் கொண்டு, பள்ளிக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். நிகழ்ச்சிகளை மகேஸ்வரி, திலகவதி, மீனா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பரிசளிப்பு நிகழ்வை கஸ்தூரி, நீலா ஆகியோர் திட்டமிட்டனர். விழா நிறைவில் பட்டதாரி ஆசிரியை கிறிஸ்டி நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக