தருமபுரியில் அரசு பணியாளர் சங்கம் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

தருமபுரியில் அரசு பணியாளர் சங்கம் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, மார்ச் 25: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் சுகமதி, சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பெரியாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தமிழக அரசின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என சங்கத்தினர் தெரிவித்தனர். ஈட்டிய விடுப்பை சரண் செய்து ஊதியம் பெறும் உரிமை 2006ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினர்.


பொது வினியோக திட்டத்தில் கைரேகை அடிப்படையில் பொருட்கள் வழங்கும் விதிமுறையில் ஏற்பட்ட மாற்றம் பொதுமக்களுக்கு சிரமமாக இருப்பதாகவும், இதை பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் என்றும் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதுவரை 40 சதவீத கைரேகை இருந்தாலே பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 90 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதால், நுகர்வோர் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் பெறுவதில் சிக்கல் எதிர்கொள்கிறார்கள்.


ரேசன் கடைகளில் பொருட்கள் எடையில் சரியாக இருக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ள நிலையில், குடோன்களில் இருந்து பொருட்கள் வரும்போது சரியான அளவில் இருக்க கண்காணிப்பு தொழில்நுட்பம் இல்லை. எனவே, குடோனிலும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.


மொத்தம் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 25ம் தேதி மாநிலம் முழுவதும் 20 மையங்களில் அரசு பணியாளர் சங்கம் போராட்டம் நடத்த உள்ளது. எதிர்காலத்தில் வேலைநிறுத்த போராட்டத்திலும் சங்கம் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆர்ப்பாட்டத்தில், நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.குமார், சீனு, குமார், சக்திவேல், பிரசார செயலாளர் சுகமதி, பெரியசாமி, ஜான் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad